நெய்வேலியில் நடைபெற இருந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இடமாற்றம்

நெய்வேலியில் நடைபெற இருந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இடவசதிக்காக கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு நேரடி ஆட்சேர்ப்பு முகாம் வரும் ஜூன் 7ஆம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலி பாரதி விளையாட்டு திடலில் நடை பெறுவதாக பாதுகாப்புத்துறை அறிவித்திருந்தது. இந்த ஆட்சேர்ப்பு முகாம் கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. ஆனால் 8 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் வர இருப்பதால், இடவசதி மற்றும் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கிற்கு இந்த ஆட்சேர்ப்பு முகாம் மாற்றம் செய்வதாக பாதுகாப்பு துறை அறிவித்தது. ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் கர்ணல் தருண் துவா கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நேரில் ஆய்வு செய்தார். ஆள் சேர்ப்பு முகாம் இருக்க வருபவர்கள் 17 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் விண்ணப்பங்கள் வரும் 18ஆம் தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

Exit mobile version