மத்திய நிதி நிலை அறிக்கை மூலம் நடுத்தர மக்கள் அதிகம் பயன் பெறுவர் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய நிதி நிலை அறிக்கை குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இப்புதிய நிதி நிலை அறிக்கை மூலம் நடுத்தர மக்கள் அதிகம் பயன் பெறுவர் எனவும் நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பு முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,நாட்டின் உள்கட்டமைப்பு நவீனமாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். விவசாய துறையை புதிய மாற்றத்துக்கான பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த நிதி நிலை அறிக்கை மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.