2வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை- விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2வது முறையாக 120 அடியை எட்டியுள்ளதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. கடந்த 7ந் தேதியன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடிகள் எட்டியது. தற்போது மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 97 கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டி.எம்.சி-யாகவும் அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு 27 ஆயிரத்து 500 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version