மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, இதே அளவில் நீர் வரத்து இருந்தால் 6 நாட்களில் அணை நீரம்ப வாய்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வந்த கனமழை குறைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைந்துள்ளது. எனினும் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அணைக்கு இதே அளவில் நீர் வரத்து இருந்தால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை, 6 நாட்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையின் உச்சபட்ச நீர்தேக்கும் அளவு, 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.