காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 205 கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதேபோல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 6 ஆயிரத்து 205 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பசனத்திற்காக 16 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளெப்பெருக்கால் அருவியில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு வேலிகள் முற்றிலும் சேதமாகியுள்ளன. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 92வது நாளாக நீடிக்கிறது.

Exit mobile version