மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக குறைவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 982 கன அடியாக சரிந்துள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 111 புள்ளி 44 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 80 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 10, 000 கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

Exit mobile version