பருவ மழைக்கு பின்னர் பசுமை திரும்பியுள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை தேடி வனவிலங்குகள் அதிகம் வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் மழையின்றி விலங்குகளுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டதுடன், தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழைபெய்து வருவதால் வனத்தில் வறட்சியால் காய்ந்திருந்த செடி கொடிகள், மரங்கள் துளிர்விட்டு பசுமைக்கு திரும்பியுள்ளன. மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் தேங்கியுள்ள நீர் நிலைகளை தேடி வரும் விலங்குள் தண்ணீர் குடித்து தாகத்தை தணித்து வருகின்றன. வட கிழக்கு பருவமழையும் அக்டோபர் மாதம் துவங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு வன விலங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பிரச்சனை இருக்காது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.