புதுக்கோட்டையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இந்தநிலையில் வெயிலின் தாக்கத்தை போக்க மக்கள் குளிர்பானங்களை வாங்கி குடிப்பதால் உடல்நல கேடு வர வாய்புள்ளதால் தற்போது இயற்கை உணவை விரும்பி உண்கின்றனர். இந்தநிலையில் உடலுக்கு குளிர்ச்சி தரும், நுங்கு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக விளைச்சல் கொடுத்துள்ளது. இதனால் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்து. மருத்துவ குணமுடைய நுங்கை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர். வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு வாங்கி செல்கின்றனர்.