கொடைக்கானல் மலைப்பகுதியில் அலை அலையாய் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி முக்கிய சுற்றுலாத் தலங்களான நட்சத்திர ஏரி, பிரையண்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தற்போது, குளிர்காலம் என்பதால் அதிகாலை நேரங்களில் மலைப்பகுதியில் அலை அலையாய் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.