கடந்த ஆண்டு, ஆறாவது முறையாக மிகஅதிக வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமான வெயிலை காட்டிலும் அதிகபட்சமாக புள்ளி நான்கு ஒன்று செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புள்ளி ஒன்பது எட்டு செல்சியல் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெயிலுக்கு ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலக வெப்பமயாமாதலே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளதாகவும் மத்திய புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது.