புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, வேள்வரை ஐந்துவேம்பு காளியம்மன் ஆலய ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே வேள்வரை கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஐந்துவேம்பு காளியம்மன் ஆலய ஆவணித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில், சிவகங்கை புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 10 ஜோடிகளும் என 19 ஜோடி மாடுகள் பந்தயத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. வேள்வரை ஐந்துவேம்பு காளியம்மன் ஆலயத்திலிருந்து கானாடு வரை 12 கிலோ மீட்டர் தூரம் பந்தைய எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

Exit mobile version