Twitter-க்கு போட்டியாக மாறும் Mastodon இணையதள பக்கம்

சமூக வலைத்தளங்களில் ஒன்றான Mastodon இணையதளப் பக்கத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் திடீரென அதிகரித்தது. ட்விட்டரில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக Mastodon ‘சமத்துவ சமூக வலைத்தளம்’ ஆக பெயர் பெற்றது. பிரபலமே இல்லாத Mastodon செயலி 2016ம் ஆண்டு யூகன் ரோச்சோ என்பவரால் தொடங்கப்பட்ட இந்த இணையதளப் பக்கம் எப்படி செயல்படும் என்பது தெரியுமா?

Mastodon இணையப்பக்கத்தை நாம் மற்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவே நாம் பயன்படுத்தலாம் அல்லது தனிப்பட்ட கணக்கு தொடங்கி இணையலாம். ட்விட்டர் போல இருக்கும் இதில் நாம் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடலாம். மற்ற பயனாளர்களை பின் தொடரலாம். 250 எழுத்துகளை கொண்டு ட்விட்டர் பதிவு இடும் போது, இதில் 500 எழுத்துகளை பயன்படுத்தலாம்.

அதிகமான பயனாளர்கள் இல்லாவிட்டாலும் கடந்த 2 ஆண்டுகளில் Mastodon பல அப்டேட்டுகளை பெற்றுள்ளது. இதனால் பாதுகாப்பான சமூக வலைத்தளமாக Mastodon விளங்குகிறது. இந்த வலைத்தளத்தை பல்வேறு அமைப்புகள் நிர்வகிக்கின்றன. அதாவது மற்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இதனை இயக்கலாம். ட்விட்டர் பதிவுகள் எப்படி “Tweets” என்றழைக்கப்படுகிறதோ அதேபோல் இதன் பதிவுகள் “toots” எனப்படுகிறது.

இதில் inditoot.com என்பது இந்தியர்களால் இயக்கப்படும் பக்கங்களை குறிக்கிறது. மேலும், இதில் ஒருவர் மற்றொருவரை @ (பயனாளர் பெயர்) @ என்பதன் மூலம் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் ட்விட்டரை போல் யார் வேண்டுமானாலும் இதில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட முடியாது. நீங்கள் பின் தொடர்பவர்கள் மட்டுமே கருத்துகளை பதிவிடலாம். இதனால் பலரும் இந்த இணையப் பக்கத்தில் கணக்குகளை தொடங்கியுள்ளனர். இதனால் எதிர்வரும் காலங்களில் இது மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version