மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில்கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய தியாகிகளின் 100ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உசிலம்பட்டி அருகே கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய தியாகிகளின் 100 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தியாகிகளின் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த துணை முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தியாகிகளின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ரஜூ, சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே உயிர்நீத்த தியாகிகளுக்கு 110 விதிகளின் கீழ் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.