100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, கடலூரில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி கடலூரில் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புசெல்வன் தலைமையில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
கடலூர் நகர அரங்கில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், வண்ணாரப்பாளையம் வழியாக கடலூர் வெள்ளி கடற்கரையில் நிறைவு பெற்றது. இந்த ஓட்டத்தில், மாவட்ட சார் ஆட்சியர் சரயூ, மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.