சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது

வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு, துப்பாக்கி சப்ளை செய்தவரை, பெங்களூருவில்   தமிழக  கியூபிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஏற்கனவே பெங்களூருவில்  முகமது ஹனீப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று தீவிரவாதிகளை கடந்த 7 ஆம் தேதி தமிழக கியூ பிரிவு காவல்துறை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் 89 புல்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, 10 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விசாரணையின் அடிப்படையில், இசாஸ் பாட்ஷாவை என்பவரை , தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் தான், வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு துப்பாக்கியை சப்ளை செய்தவர் என தெரியவந்தது.. இசாஸ் பாட்ஷா, மும்பையில் இருந்து  துப்பாக்கி வாங்கிவந்து  சப்ளை செய்யும் தீவிரவாதி என்பதும் தெரியவந்துள்ளது.  இசாஸ் பாட்ஷா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 15 நாள் போலீஸ் காவல்வழங்கப்பட்டுள்ளது.. இவ்வழக்கில் மேலும், சிலர் சிக்குவார்கள் என்றும், கூறப்படுகிறது.

Exit mobile version