உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மகாதீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் பின்புறத்தில் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில், ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில், மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று, நடைபெற்ற மகாதீப திருவிழாவில், 200 கிலோ எடைக் கொண்ட கொப்பறையில், 3,500 கிலோ எடையிலான நெய்யை ஊற்றி ஆயிரம் மீட்டர் பருத்தி திரியால் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தெய்வீகமான நிகழ்வினை கண்டு, அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையானுக்கு அரோகரா என பக்தி முழக்கிமிட்டு பரவசமடைந்தனர்.
Discussion about this post