நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கையை தற்காலிக நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பியூஸ் கோயல் தாக்கல் செய்யவுள்ளார். இந்தநிலையில், அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பது குறித்து இன்று அனைத்து கட்சிகளுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.