மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அமித்ஷா இன்று தமிழகம் வருகை

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து கட்சிகளும் அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசு கூட்டணிக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மகாராஷ்டிராவில், சிவசேனா பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வர உள்ளார். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அமித் ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

Exit mobile version