உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் வரும் 16ம் தேதி நிறைவு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் ஆகியன கட்சி சார்பற்ற முறையிலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியன கட்சி சார்பிலும் நடத்தப்பட உள்ளன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதியன்று தொடங்கியது. இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய வார்டு போன்ற பதவியிடங்களுக்கு மனுதாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 27 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, கடந்த 5 நாள்களில் மொத்தமாக, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது.

Exit mobile version