ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி, கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், தங்கையுடன் ஆடு மேய்க்க சென்று மாயமான 9 வயது சிறுமி, 2 நாட்களுக்கு பிறகு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

வேண்டுராயபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி-ராஜலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகள், தங்கையுடன் வீட்டிற்கு அருகே ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தேடப்பட்டு வந்த சிறுமி, வீட்டின் அருகிலிருந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி தவறி கிணற்றில் விழுந்தாரா? அல்லது எவரேனும் கொலை செய்தார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version