மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியாகும்

மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,500 இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 4 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அகில இந்திய கலந்தாய்வு தேதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்கள் தாமதமாக வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் கலந்தாய்வு தேதியிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Exit mobile version