காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். டெல்லியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார். 

Exit mobile version