அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். வடசென்னை தொகுதியில் அழகாபுரம் மோகன் ராஜ் போட்டியிடுகிறார். விருதுநகர் தொகுதியில் ஆர்.அழகர் சாமியும், திருச்சியில் டாக்டர்.இளங்கோவனும் போட்டியிடுகிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Exit mobile version