இந்தியாவில் 115 கோடி வசூல் செய்து சாதனை படைத்த தி லயன் கிங்

கடந்த ஜூலை 9ம் தேதி வெளியான தி லயன் கிங் திரைப்படம், இந்தியாவில் அதிக வசூல் படைத்துள்ளது. அமெரிக்காவின் கம்ப்யூட்டர் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் தயாரான இந்த திரைப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், இந்தியாவில் மட்டும் 115 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 4 வது ஹாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version