தொழில் முனைவோர்களின் முதலீடு கிடைத்தவுடன் கைத்தறி பூங்கா விரைவில் துவங்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின், 159ஆவது விற்பனை நிலையத்தை, சென்னை மடிப்பாக்கத்தில் துவக்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீதான வழக்கு, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதாக, அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். தொழில் முனைவோர்களின் முதலீடு கிடைத்தவுடன், கைத்தறி பூங்கா துவங்கப்படும் என்று அவர் கூறினார்.