"ஜிசாட் 7A" செயற்கைக்கோளின் ஆயுட்காலம் அதிகரிக்கும் – இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் சிவன்

புதிய தொழில்நுட்பத்தால் “ஜிசாட் 7A” செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் அதிகரிக்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான “ஜிசாட் 7ஏ” வுடன், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப்11’ ராக்கெட் அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சிவன் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நிலைகளில், புதிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், செயற்கைக்கோளின் வாழ்நாள், ஆறு மாதங்கள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு, மேலும் பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும், அவற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

 

 

 

Exit mobile version