மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய புராண நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது .
108 வைணவ திருத்தலங்களில் புகழ் பெற்றது மதுரை கூடலழகர் பெருமாள் கோயில். மதுரையை ஆண்ட வல்லபதேவ பாண்டிய மகாராஜன், பரம்பொருள் யார் என்று கேள்வி எழுப்பி, சரியாக பதில் சொல்பவர்களுக்கு பொற்கிழி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையறிந்த பெரியாழ்வார், ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள் என்று விளக்கினார். அதற்காக பெரியாழ்வார் பட்டத்து யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது பெருமாள் கருட வாகனத்தில் காட்சி அளித்ததாகவும், பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமே என்று எண்ணி பெரியாழ்வார், திருப்பல்லாண்டு பதிகத்தை பாடியதாகவும் புராணம் கூறுகிறது.
அதை நினைவு கூறும் விதமாக, திருப்பல்லாண்டு பாடிய புராண நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் பெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் யானை மீதும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
Discussion about this post