நிரவ் மோடியை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்ற குஜராத் தொழிலதிபர் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். இதையடுத்து நிரவ் மோடி மீது அமலாக்கத்துறையும், சிபிஐயும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன. இந்தநிலையில் லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த அவரை இங்கிலாந்து அரசு கைது செய்தது. இதையடுத்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகவும், சட்ட நடைமுறைகள் முடிந்ததும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்றும் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.