நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட அமலாக்கத்துறை முடிவு

வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது.  இதனையடுத்து லண்டனுக்கு தப்பிச்சென்ற அவர், கைது செய்யப்பட்டு, லண்டன் சிறையில் உள்ளார். இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துகளில் சிலவற்றை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி மும்பையில் நேரடியாகவும், மார்ச் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலமாக என இராண்டு கட்டமாக ஏலம் நடைபெற உள்ளதாகவும், இவற்றின் மொத்த மதிப்பு 50 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version