மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான எய்ம்ஸ் – தமிழத்தில் அடுத்தக்கட்ட பணிகள் துவக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

750 படுக்கைகள், 100 மருத்துவ இடங்கள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை தோப்பூரில் அமைய உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் 200 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வடிவமைப்பு பணி மற்றும் மண் பரிசோதனை முடிந்து, மத்திய அரசிடம் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்தகட்டமாக டெண்டர் விடும் பணிகளை மத்திய அரசு துவங்க உள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை 45 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 எம்.பி.பிஎஸ். இடங்கள் கூடுதலாகக் கிடைப்பதுடன், நோயாளிகளும் பயன்பெறுவர்.

750 படுக்கைகள் 100 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளடக்கிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைய உள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பாக 200 ஏக்கர் நிலம் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் செய்யப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல் தற்போது வடிவமைப்பு பணி முடிந்து மண் பரிசோதனையும் முடிந்துள்ளது, இதன் அறிக்கையும் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,அடுத்தகட்டமாக பணிகளை துவங்க டென்டர் விடும் பணிகள் துவங்க உள்ளது. அதற்கான பணிகளை துவங்கியுள்ளது மத்திய அரசு இந்த எய்ம்ஸ் மருத்துவபணி முடிந்து மக்கள் சேவைக்கு வரும்நிலையில் தென்மாவட்ட மக்கள் மாணவர்கள் இதனால் பயணடைவர்.

Exit mobile version