மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டன
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் அதிமுக மற்றும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டன.போட்டியில் திருவாமத்தூர், பனங்குப்பம், கோலியனூர், சோழனூர், எடப்பாளையம், உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் இந்தியன் ஜூனியர் அணியை வீழ்த்தி சுந்தர் கிரிக்கெட் கிளப் அணி கோப்பையை தட்டி சென்றது.