மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடையில்லை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் கட்ட தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக்கூடாது என இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை இல்லை என்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே ஜெயலலிதா உயிரிழந்ததால், அவரை தண்டனை குற்றவாளி என கூற முடியாது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். இதையடுத்து, மெரினாவில் நினைவிடம் கட்ட எந்த தடையும் இல்லை. இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Exit mobile version