17வது மக்களவைக்கு இறுதிக்கட்டத் தேர்தல் தொடக்கம்

17வது மக்களவைக்கு இறுதிக்கட்டத் தேர்தல் 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கியது. 7 கட்ட தேர்தலில் இதுவரை 6 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகாரில் 8 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 கோடியே 17 லட்சம் பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.

Exit mobile version