மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில், மத்திய பாஜக அரசின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதியை கூடிய விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய பாஜக அரசின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியின் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமரின் இல்லத்தில், இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடம் ஒதுக்கும் திட்டத்தில், மேலும் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.