இந்திய ராணுவம் சிந்து சுதர்சன் என்னும் பெயரில் ராஜஸ்தானின் பார்மரில் மிகப்பெரிய போர்ப் பயிற்சியை நடத்தி வருகிறது.
இந்திய ராணுவத்தின் சுதர்சன் சக்கரா படைப்பிரிவு ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பாலைவனப் பகுதியில் மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் நாற்பதாயிரம் படைவீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பீரங்கிகள், ஏவுகணை செலுத்தும் வாகனங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தற்காத்தல், தாக்கி முன்னேறுதல், தாக்கி அழித்தல் ஆகிய உத்திகளில் போர்ப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்தப் போர்ப் பயிற்சி டிசம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.