மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய அளவு மழையின்மையால் தேக்கடியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது
சுற்றுலாத் தலமான தேக்கடியில் படகு சவாரி செல்ல வெளிநாடுகளிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கரையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தையும், இயற்கை அழகை ரசித்து படகு சவாரி செல்ல அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். போதிய மழையில்லாமல் தேக்கடியில் நீர்மட்டம் 115 அடியாக குறைந்துள்ளதால் 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது.