கூடலூரில் திரையரங்குகள் அனைத்தும் மண்டபங்கள், உணவகங்களாகவும் மாறியதால், பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் முதல் காட்சியை காண பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 11 திரையரங்குகள் இருந்தன. 2004ம் ஆண்டுக்குப் பிறகு தங்கமணி, நர்த்தகி, தேவர்சோலை கணேஷ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. பின்னர், அவை திருமண மண்டபம், உணவகங்களாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி மோகத்தாலும், திருட்டு விசிடிக்கள் மூலம் திரைப்படங்களை பொதுமக்கள் பார்ப்பதால் தான், வருமானம் கிடைக்காமல் திரையரங்குகளை மூடிவிட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.