கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீர்த்தவாரி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கடந்தமாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாளில்
திருக்கல்யாண வைபவமும் 9ஆம் நாளில் திருத்தேரோட்டமும் நடைபெற்றது.10ஆம் நாள் நிகழ்ச்சியாக காரத்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெற்றது. மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடனும், காளை வாகனத்தில் சுவாமியும், பசுவாகனத்தில் அம்பாளும் கன்று வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் வீதியுலா வந்தனர். பின்னர் தீர்த்தகுளம் அருகே எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு மகாதீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது . இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி வழிபட்டனர்.