குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் இறுதிநாளில் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது.
மைசூருக்கு அடுத்தபடியாக புகழ்பெற்று விளங்கும் குலசேகரபட்டினம்தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. குலசேகபட்டினம் தசரா திருவிழா, கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூல் செய்து கோயிலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது. முத்தாரம்மன் மகிஷாசூரமர்த்தினியாக திருக்கோலம் பூண்டு சப்பரத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோசங்கள் முழங்க மகிசாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. சூரசம்ஹாரம் நடைபெற்ற கடற்கரை பகுதியில் மின்விளக்குகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.