சபரிமலை கோவிலை மத்திய அரசு ஏற்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார். சபரிமலை விவகாரத்தை கேரள அரசு உதாசினப்படுத்துவது சரியல்ல என்று கூறிய அவர், பொறுப்புகளை தேவசம் போர்டு நிர்வாகத்திடம் கொடுத்து விட்டு மாநில அரசு அமைதியாக இருக்கக்கூடாது என்றார்.
சபரிமலையில் பக்தர்களுக்கு மட்டும் தான் இடம் உள்ளது. சமூக ஆர்வலர்களுக்கு, சமூக செயல்பாட்டாளர்களுக்கு இடம் இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார். சபரிமலைக்கு இப்போது சென்ற பெண்கள் சமூக ஒற்றுமையை குலைக்க கூடியவர்கள் என்று குற்றம் சாட்டினார்.
சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு , கேரள அரசு பக்தர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.