கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் உள்ளதாக சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று நம்புவதாக கூறி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.