வங்கக் கடலில் கஜா புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு கஜா எனப் பெயரிடப்பட்டுள்ளது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் கஜா புயல் அடுத்த 2 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், நாளை இரவு முதல் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம் தெற்கு ஆந்திரா இடையே வரும் 15-ம் தேதி கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.