பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட கபாடி போட்டி

விருதுநகரில் பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட கபாடி போட்டி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் இன்று பெண்களுக்கான கபாடி கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Exit mobile version