பாலின சமத்துவத்தை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து, திறம்பட விசாரிப்பது குறித்த தேசிய கருத்தரங்கை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாநில நீதித்துறை பயிலகம் இணைந்து நடத்தியது.
உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்தரங்கை துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வழக்குகளில் விரைந்து தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும், தாமதப்படுத்தப்பட்ட நீதி, நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என்பதை போல், அவசரப்படுத்தப்படும் நீதியும், நீதி புதைக்கப்படுவதற்கு சமம் என்று தெரிவித்தார்.