திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அமமுக ஒன்றிய செயலாளர், கிளைச்செயலாளர், மாணவரணி செயலாளர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார்.