கோவையில் இன்று நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார்.
கோவை செட்டி பாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில், 700க்கும் மேற்பட்ட காளைகளும் 17 குழுக்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். போட்டியை முன்னிட்டு 20 ஆம்புலன்ஸ், 30 கழிவறைகள், தண்ணீர் வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவல் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில்,போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது ஆண்டாக நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்றார்.