இத்தாலி மக்கள் பணத்தை தூக்கி வீசியுள்ளனர் என வைரலாகும் புகைப்படம்!

கொரோனா தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகளினால் விரக்தியடைந்து இத்தாலி மக்கள் பணக்கட்டுகளை சாலையில் தூக்கி வீசியுள்ளனர் என்று வெளியாகி உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பால் உலகில் உள்ள நாடுகளிலேயே, இத்தாலி அதிக உயிர்களை பலி கொடுத்திருக்கிறது. தற்போது வரை அங்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்தாலி மக்கள், பணத்தால் ஒன்றும் உபயோகம் இல்லை என்று கூறி பணக்கட்டுகளை சாலையில் தூக்கி வீசியுள்ளனர் என வெளியாகி உள்ள புகைப்படம் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு 100 லைக்குகளையும், 500 முறைக்கும் மேல் பகிரப்பட்டும் உள்ளது. உண்மையில் இந்த புகைப்படத்திற்கும், கொரோனா தொற்று விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது, வெனிசுலா நாட்டில், 2019 ஆம் ஆண்டில் மெரிடா நகரத்தில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் என்பதே உண்மை.

Exit mobile version