அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பில் தெளிவு இல்லாததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அறிவிப்பில் தெளிவு இல்லாததால், சாலையில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

கொரனோ பரவல் அதிகரிப்பால் தமிழ்நாட்டில், தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா அபாயத்தை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றித்திரியும் பொதுமக்களால், சாலையில் இருசக்கர வாகனங்கள் அலைமோதுகின்றன.

சென்னையில் முழு ஊரடங்கிலும் முக்கிய சாலைகளில் வழக்கம் போல் இயங்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரசின் ஊரடங்கு அறிவிப்பில் தெளிவு இல்லாததால், வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், மருத்துவ தேவை, அத்தியாவசிய தேவை என ஆளுக்கொரு காரணங்களை கூறி இரு சக்கர வாகனங்களில் படையெடுப்பதால் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

பொதுமக்களிடம் கடுமை காட்ட வேண்டாம் என்ற உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரும் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.

இதனால் எந்த அச்சமும், கவலையும் இன்றி பலர் வெளியில் சுற்றித்திரிந்து கொரோனாவை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

ஏராளமான மக்கள் ஊரடங்கிற்காக தங்கள் வாழ்வாதாரத்தை தியாகம் செய்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள நிர்வாக திறனற்ற ஆட்சியாளர்களால் ஊரடங்கின் முழுப்பலன் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

Exit mobile version