மதிமுக பொது செயலாளர் வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு, மதிமுகவை உடைக்க கருணாநிதி முயற்சி செய்வதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதோடு, கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, வைகோ மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக, குற்றச்சாட்டு பதிவு மற்றும் சாட்சிகள் விசாரணை என அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் நிறைவடைந்த நிலையில், இதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்பதால் வைகோவின் எம்.பி. பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.