உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் விவகாரம்: ஜூன் 17ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அடுத்தகட்டமாக வரும் 17ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களில் அமைக்கப்படும் உயர் மின் கோபுரங்கள் மூலம் தங்களின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியுடன் ஈரோடு, கரூர், திருப்பூர் மற்றும் கோவையைச் சேர்ந்த விவசாயிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், 8வது கட்ட பேச்சுவார்த்தை வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கொங்கு விவசாயிகள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ராஜாமணி, தங்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசுவதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் கூறினார்.

Exit mobile version